சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை பதிவு செய்து வருகிறது.
அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டொலர் அளவிலும், WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 68 அமெரிக்க டொலருக்கும் குறைவான விலையிலும் விற்பனையாகி வருகிறது.
கடந்த ஜூன் 30 ஆம் திகதி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 72.95 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் 69.50 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தது.
இதன்மூலம், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது உறுதியாகியுள்ளது.
