இலங்கை அரசியல் பரப்பிலும் பாதுகாப்புத் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் விவகாரம், தற்போது அடுத்த கட்ட திருப்பத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு எதிராக மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் நடத்தப்படுவதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
