மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (30) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 70.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, சர்வதேச அளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 72.80 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
இதனுடன், இயற்கை எரிவாயு விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.175 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
