பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Sinthu



 2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும்.

முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.