சுரேஷ் சலேவை மீட்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவால் மிக துல்லியமான மற்றும் கடும் இரகசியமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மிக பயங்கரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த தகவலை லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களாவது,
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிஉயர் பாதுகாப்பு வளாகத்திற்குள் உள்ளக நபர்களால் 'ஒமேகா அறை' (Omega Room) என்று அழைக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளைக் கொண்ட இரகசியப் பிரிவொன்று அமைந்துள்ளது.
இந்தப் பிரிவானது இராணுவத்தினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிரிவிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும்.
இதற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே நுழைய அனுமதி உள்ளதோடு சாதாரண இராணுவப் பணியாளர்கள் உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
