எரிபொருள் விலையில் மாற்றம்

Sinthu

உலகளாவிய எண்ணெய் விலை சரிவால் எரிபொருள் விலையில் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது!

உலகளாவிய எரிபொருள் விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உறையாற்றிய பெர்னாண்டோ, அரசு இதுவரை ரூ. 57 பில்லியன் மதிப்பிலான எரிபொருள் மானியத்தை வழங்கியுள்ளதாகவும், இந்த மானியத் திட்டம் இந்த மாதம் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் மீது தேவையற்ற நிதிச் சுமையை சுமத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்திக் கூறிய அதேவேளையில், மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து கொள்கை ரீதியிலான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலின் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வைத் தொடர்ந்து, உள்நாட்டு எரிபொருள் விலைகளைச் சிறிதளவு உயர்த்த வேண்டியிருந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இருப்பினும், சர்வதேச எரிபொருள் விலைகள் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாகவும், குறைந்த உலகளாவிய விலையில் வாங்கப்படும் எரிபொருள் இலங்கையை வந்தடையும்போது நுகர்வோர் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.