அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

Sinthu

 


அரச உயர் அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (30) முடிவடைவதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த காலக்கெடுவிற்குள் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க தவறும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

எனவே சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்கள் அனைத்தையும் உத்தியோகபூர்வ இணையதளமான https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.