காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (08.06.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்
