முன்மொழியப்பட்டுள்ள புதிய உயர்கல்விக் கொள்கை தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை இணையத்தளம் ஊடாகச் சமர்ப்பிப்பதற்கான கேள்விக்கொத்து ஒன்று அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உயர்கல்விக் கொள்கையை உருவாக்கும் முதற்கட்டமாகக் கல்வித்துறை சார்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்கனவே கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்தே தற்போது பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
