அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

Sinthu

 


அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வேதனம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் ரி. அசோக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஓய்வுபெற்ற நீதியரசர் கே. கே. ஏ. வி. சுவர்ணாதிபதி, என். பி. எம். ரணதுங்க, மருத்துவர் ஆர். டபிள்யூ. ஜயந்த, ஜி. எம். முதித் சுஜீவ, பிரிகேடியர் (ஓய்வுபெற்ற) பி. ஜே. பெர்னாண்டோ, ஏ. எல். முஹம்மட் முக்தார், எஸ். டி. பி. ரத்நாயக்க, ஏ. டபிள்யூ. லால் சந்திர வீரகோன், ஜி. ஏ. பி. பத்மநாப, கே. எஸ். லால் பெரேரா மற்றும் 

ஆணைக்குழுவின் செயலாளர் டி. எம். சி. நாலக திசாநாயக்க ஆகியோர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக, 2026.06.22 ஆம் திகதியிடப்பட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வேதனம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.