சிறுபோகத்திற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
அதன்படி, பின்வரும் விலைகளின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்:
நாடு நெல்: 1 கி.கி ரூ.120
சம்பா நெல் : 1 கி.கி ரூ. 130
கீரி சம்பா நெல் : 1 கி.கி ரூ. 140
அதேபோல், தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை நுகர்வோருக்கு மிக விரைவாக விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
.jpeg)