முதியோர் கொடுப்பனவு தொடர்பாக சற்றுமுன் வெளியான தகவல்

Sinthu

 


2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த முதியோர்களை உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உள்வாங்கி, 'அஸ்வெசும' கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

முதியோர் கொடுப்பனவு இரண்டு வழிகளில் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வசும வங்கி கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகள் செலுத்தப்படுகின்றன.

அதன்படி அவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த மாதம் 29ஆம் திகதி வழங்கப்பட்டதாக சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

அஸ்வசும கணக்குகள் இல்லாத அல்லது கணக்கு சிக்கல்கள் காரணமாக கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கான கொடுப்பனவுகளே அஞ்சல் நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.