சினிமா பாணியில் வங்கியை உடைத்து பெருந்தொகை தங்க நகைகள் கொள்ளை

Sinthu

 



மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த திருட்டு சம்பவம் மூன்று நபர்களால் இன்று (23) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

வங்கி வளாகத்திற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல், அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு, வங்கியின் பின்புறம் உள்ளகுளியலறை ஜன்னல் வழியாக வங்கிக்குள் நுழைந்துள்ளது.  

இதன்பின்னர் கும்பலானது அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சந்தேகநபர்களை கைது செய்யும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.