கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர் உளநல நிபுணர் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து மாணவர்களினதும் உளநலனைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் சில முக்கிய ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.
அதற்கமைய, தங்கள் பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதற்காக, அதனைச் சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
இத்தகைய பதிவுகள், எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள மற்ற மாணவர்களுக்கு மேலும் மன உளைச்சலையும் துக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.jpeg)