கைது செய்ய வேண்டாம் என கோரிய கோட்டாபய! சற்று முன்னர் வெளியான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம்..

Sinthu

 


தம்மை கைது செய்ய வேண்டாம் எனக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி வரை குறித்த மனு மீதான மேலதிக விடயங்களைப் பரிசீலிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக தம்மைக் கைது செய்வதைக் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தாக்கல் செய்த மனு இன்று(18.06.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க உள்ளிட்டவர்களைக் கொண்ட அமர்வின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  

கோட்டாபய ராஜபக்ச சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், எதிர் மனுதாரர்கள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சஹராஷி ஹேரத்தும் வாதப் பிரதிவாதங்களை முன்வைக்க உள்ளனர். 

இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் எதிர் மனு தாரரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.