அம்பத்தலையிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரகால பழுது காரணமாக, பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
இந்நிலையில் மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபேசேகரபுர மற்றும் கொலன்னாவ மாநகர சபையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி இன்று (05.06.2026) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
