படகு கவிழ்ந்து விபத்து: கடலோரப் பகுதியில் 15 அகதிகளின் உடல்கள் மீட்பு

Sinthu

 


கிழக்கு லிபியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் ஒரு சிறுமி உட்பட குறைந்தது 15 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. தப்பிப் பிழைத்த 10 நபர்கள் அளித்த தகவலின்படி, அந்தப் படகில் மொத்தம் 61 பேர் வரை பயணித்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள டோப்ருக் என்ற நகரத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், கடலில் மேலும் பல உடல்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

2011இல் நேட்டோ ஆதரவுடன் நடந்த கிளர்ச்சியில் முஅம்மர் கடாபி வீழ்த்தப்பட்டதற்குப் பிறகு, வறுமை மற்றும் உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பி ஐரோப்பாவிற்குச் செல்ல முயலும் ஆப்பிரிக்க அகதிகளின் முக்கியப் பயணப் பாதையாக லிபியா மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.