எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

Sinthu

 

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (28) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

சந்தைத் தரவுகளின்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.23 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, சர்வதேச அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.99 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதனுடன், இயற்கை எரிவாயுவின் விலையும் இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.279 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உற்பத்தி நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவை எரிசக்தி விலைகளில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.