தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! சாரதி பரிதாப மரணம்

Sinthu

 



களுத்துறை, அளுத்கம - டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் நேற்று(10) மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக தொடருந்துடன், முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ஓட்டோ தர்கா நகரிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்துள்ளதோடு, தொடருந்து கடவையைச் சாரதி கவனக்குறைவாக கடக்க முயன்றபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த போது ஓட்டோவில் சாரதி மட்டுமே பயணித்துள்ளார்.உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.