ஆசிரியர் பணிக்கு கல்விப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மாகாண சபை மட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டித் தேர்வின் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது.
இதன்படி ஆசிரியர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 23,006 பேர் ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.
