கொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை (09) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
