இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Sinthu

 


கம்பஹா - மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(6.6.2026) இடம்பெற்றுள்ளது.

மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மீரிகமை பகுதியில் நேற்று இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் எதிரெதிர் திசையில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் காரணமாக ஒரு முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய முச்சக்கரவண்டியை செலுத்திய 31 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு முச்சக்கரவண்டிகளிலும் சாரதிகளைத் தவிர வேறு எவரும் பயணிக்கவில்லை. விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.