பாடசாலைகளுக்கான விசோட அறிவித்தல்

Sinthu



பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில், சுகாதார அமைச்சினால் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கான விசேட பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான இலங்கை" (Healthy Sri Lanka) என்ற தேசிய திட்டத்தின் கீழ் இந்த புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை சிற்றுண்டிச் சாலைகள் தேசிய ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரதான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளின் விபரம் வருமாறு:

பிரதான உணவுகள்:


காய்கறி கலந்த சோறு


பருப்புச் சோறு


சோளப் பால்சோறு


தேங்காய்ப்பால் பொங்கல்


காய்கறி பிட்டு


ஊட்டச்சத்து ரொட்டி


பூசணிக்காய் தேங்காய் ரொட்டி


பலாப்பழ கொத்து


காய்கறி முட்டை ரொட்டி


தோசை, மசாலா தோசை, இட்லி மற்றும் காய்கறி ஊத்தப்பம்

தாளித்த பயறு வகைகள்/தானியங்கள்


முட்டை சலட் சண்ட்விச், மீன் சண்ட்விச் மற்றும் காய்கறி சண்ட்விச்


காய்கறி சுருள் (Vegetable wraps)


காய்கறி சலட் மற்றும் சோளச் சலட்


முளைகட்டிய பயறு கறி


முட்டை மசாலா கறி மற்றும் முட்டை ஒம்லெட் சுருள் (Egg omelet rolls)

பேன்கேக் (Pancakes)


பலாக்கொட்டை உருண்டை


மரவள்ளிக்கிழங்கு/வற்றாளை வள்ளிக்கிழங்கு உருண்டை (Sweet potato aggala)


கலப்பு பழச்சாறு


பயறு பால் கஞ்சி


காய்கறி சூப், சோள சூப் மற்றும் பூசணிக்காய் சூப்


மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை மாத்திரம் பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.