அரச உத்தியோகத்தவர்களுக்கு விசேட அறிவிப்பு

Sinthu

 

இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகள் மூலம் நேரடி அல்லது இணைய வழியாகக் கூட்டங்கள் நடத்தப்படுவதாாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பிரதேச செயலகங்களின் அன்றாடப் பணிகளுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/2023 இன் படி, பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளில் தங்களைச் சந்திக்க வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு நாளை முதல் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.