சற்று முன் பல்கலைகழக மாணவி மரணம்

Sinthu

 


ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், மாத்தறையின் தெனியாய பகுதியைச் சேர்ந்தவரும், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்தவருமான சந்தலி தாரிகா என்ற மாணவி ஆவார்.

குறித்த பெண் இறப்பதற்கு முன்னர், தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வட்ஸ்அப் மூலம், "நான் சாகாமல் இருந்தால் வருவேன்" என்று ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். இதுவே அவர் விட்டுச்சென்ற கடைசி குறிப்பு என்று கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தால் பல்கலைக்கழகத்திலுள்ள அனைவரும் ஆழ்ந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவரது சக மாணவர்கள் இரங்கல் தெரிவித்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் பதிவிட்டுள்ளனர்.



Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.