மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் அபாயம்: உலக வங்கி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு காரணமாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்திய மிக மந்தமான நிலையை நோக்கி உலகப் பொருளாதார வளர்ச்சி செல்லக்கூடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்டுள்ள உலக வங்கியின் உலகப் பொருளாதார அறிக்கையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் இது, கடந்த ஜனவரி மாதக் கணிப்பில் இது 2.9 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
எரிசக்தி விலை உயர்வு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதிக கடன் வாங்கும் செலவுகள் ஆகியவையே இந்தக் குறைப்புக்கான காரணங்களாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
வளர்ந்து வரும் நாடுகளே இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
2027ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது 2010களின் சராசரி வளர்ச்சியை விட 0.4 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை,மத்திய கிழக்கு மோதலின் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி உறுதியளித்துள்ளது.
இதற்காக 60 பில்லியன் டொலர் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மோதல் நீடித்தால் இந்த ஆதரவை 100 பில்லியன் டொலர் வரை உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது
