அநுராதபுரத்தில் சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய பிக்குவின் மரபணுவை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம்(16.06.2026) அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, அரச பகுப்பாய்வாளரிடம் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மரபணு பரிசோதனைக்காக இதனை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
இரத்த மாதிரியை வழங்கிய பின்னர் மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி ஒருவரைத் கொடூரமான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரான பிக்கு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதியாக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த வெசாக் தினத்தன்று அந்தப் பதவி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
