நெல்லுக்கான உத்தரவாத விலை

Sinthu

 


அரிசி இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் முடிவு காரணமாக நெல்லுக்கான உத்தரவாத விலை குறைந்துள்ளதாக தொழிலதிபர் டட்லி சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரிசிக்கு ஒரு உத்தரவாத விலை கொடுக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், நாட்டு அரிசியின் விலை 120ரூபா, சம்பா அரிசியின் விலை 125ரூபா, கீரி சம்பா அரிசியின் விலை 130ரூபா என்று உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான உத்தரவாத விலையினால் கீரி சம்பாவிற்கு வருமானம் குறைவு. அதனால்தான் விவசாயிகள் பெரும்பாலும் கீரி சம்பா மற்றும் சம்பா சாகுபடியைக் கைவிடுகிறார்கள்.

அதற்கு வழங்கப்படும் விலை போதுமானதாக இல்லாததால், நாட்டு அரிசி மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

கிடைக்கும் வருமானம் சமமாக இல்லாதபோது, ​​நாட்டு அரிசியின் விளைச்சல் மட்டுமே உயர்ந்து, அதன் விலை அதலபாதாளத்திற்குச் சரிந்துவிடுகிறது.

கீரி சம்பா அரிசிக்குத் தட்டுப்பாடு இருப்பதால், அரிசி அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது. இது மற்றொரு செயன்முறை இப்போது ​​நம் நாட்டிற்கு ஒரு லட்சத்து ஐம்பத்தேழாயிரம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரிசி இறக்குமதி செய்யப்படாமல் இருந்திருந்தால், அந்த விவசாயிகளுக்கு அந்த விலையில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது.

ஆனால் அதனை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அரசாங்கம் தான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டட்லி சிரிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்து பியர் உற்பத்திக்கும், கள்ளச் சந்தைக்கும் விற்பனை செய்வதன் மூலம் கீரிசம்பா அரிசி விலை உயர்வுக்கு டட்லி சிரிசேனவே முக்கிய காரணம் என்று பலதரப்பினரும் குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.  


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.